ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டால் பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்களா? அசர வைக்கும் உண்மை!

ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டால் கூட பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்கள் என்கிற சினிமாத்தனம் உண்மையா என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.


தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாக காட்டப்படும் ஒரு காட்சி முதலிரவு நடைபெறும் அடுத்த சில நாட்களில் அந்த பெண் வாந்தி எடுத்து கர்ப்பமாகிவிடுவார். இதே போல் ஹீரோவின் தங்கையை வில்லன் ஒரே ஒரு முறை பலாத்காரம் செய்வான் அடுத்த சில மாதங்களில் அந்த பெண்ணும் வாந்தி எடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுவார்.

இது போன்ற காட்சிகளுடன் திரைப்படங்களை பார்க்கும் ஆண்களும் சரி பெண்களும் ஒரே ஒரு முறை உடல்கள் சேர்ந்தால் போதும் கர்ப்பமாகிவிடலாம் என்று கருதுவது உண்டு. திருமணம் ஆன பிறகும் கூட முதலிரவை முடித்துவிட்டு கர்ப்பமாக காத்திருக்கும் ஆண்கள் பெண்கள் என பலர் உண்டு.

உண்மையில் பெண்கள் கர்ப்பமாக வேண்டும் என்றால் அதற்கு கணவனுடன் சேர வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இதில் எண்ணிக்கை முக்கியம் இல்லை. எத்தனை முறை கணவனுடன் சேர்க்கிறோம் என்கிற எண்ணிக்கை என்பது பெண்களை கர்ப்பமாகுவதற்கு ஒரு காரணியே இல்லை. மாறாக பெண்கள் கணவனுடன் சேரும் நாட்கள் தான் அவர்களை கர்ப்பமாக்குகிறது.

அதாவது பெண்கள் உடலில் கருமுட்டைகள் வெளியேறும் நாட்களில் உறவு கொண்டால் மட்டுமே அவர்கள் கர்ப்பம் ஆவார். இந்த கருமுட்டை பெண்களுக்கு அனைத்து நாட்களிலும் வெளியாறாது. மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு இந்த கரு முட்டை வெளியேறும் நாட்களை பெண்கள் எதிர்கொள்வார்கள்.

பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முடிந்த மறுநாளே கருமுட்டை வெளியேற ஆரம்பித்துவிடும். சில பெண்களுக்கு 3 நாட்களில் சுழற்சி முடிந்துவிடும். இவர்களுக்கு 4வது நாளில் கருமுட்டை உருவாக வாய்ப்புள்ளது. இதே போல் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஒரு வாரம் வரை கூட நீடிக்கும். இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி துவங்கிய நாளில் இருந்து 8வது நாளில் கரு முட்டைகள் வெளியேறலாம்.

பொதுவாக கருமுட்டைகள் மாதவிடாய் சுழற்சி முடிந்த முதல் மூன்று நாட்களுக்கு அதிகமாகவும் ஆரோக்கியமாகவும் நிலையாகவும் பெண்களுக்கு உருவாகும். அதன் பிறகு இதன் வீரியம் குறையும். எனவே மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்திற்குள் கணவனுடன் சேரும் பெண்கள் கர்ப்பமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு உருவாகும் கருமுட்டையானது மூன்று நாட்கள் வரை ஆண்களின் விந்தணுவுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் சக்தியுடன் இருக்கும்.

எனவே இந்த நாட்களில் ஆண்கள் பெண்களுடன் சேரும் போது கருமுட்டையுடன் விந்தணு சேர்ந்து குழந்தை உருவாகும். எனவே கரு முட்டை வெளியாகி 3 நாட்களில் உறவு கொள்ளும் போது பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதன் பிறகான நாட்களின் உறவால் குழந்தை உருவாவதற்கான வாய்ப்பு குறைவு தான். இந்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் எத்தனை முறை பெண்கள் உடலுறவு கொண்டாலும் அவர்களுக்கு கர்ப்பம் தரிக்க வாய்ப்பு குறைவு தான்.