துக்ளக் ஆசிரியர் சோ என்ன மாமாவா? தட்டிக் கேட்க யாரும் இல்லையா? பதற்றத்தில் பிராமணர்கள்!

இந்து மதத்தையும் மோடி அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து பல காட்சிகளில் கைதட்டு வாங்கும் படமாக தர்மபிரபு வெளிவந்துள்ளது.


நகைச்சுவைக்காக என்றாலும், மறைந்த பத்திரிகையாளர் சோவை ஒரு மாமா போலவே கேவலப்படுத்தியிருப்பது, அவர் சமூகம் சார்ந்த பலருக்கும் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. அது சரி, தர்மபிரபு படத்தின் கதை என்ன? தர்மபிரபு என்ற எமன் ஒய்வு பெற விரும்புகிறார்., அதனால் தனது மகன் யோகிபாபுவை புதிய எமனாக நியமிக்கிறார்.

அதே நேரம் சித்திரகுப்தனுக்கும் எமன் பதவி மீது- ஆசை வந்துவிடவே ,சோ.ரங்கசாமி என்ற நபரை நரகத்தில் இருந்து வரச்சொல்லி எமனை வீழ்த்தி பதவி பெற ஆலோசனை கேட்கிறார்.

சித்திரகுப்தனின் சகோதரியை புதிய எமனின் படுக்கை அறைக்கு அனுப்பி மயக்கச் சொல்கிறான் சோ.ரங்கசாமி. அந்த திட்டம் தோல்வி அடையும்போது, உங்கள் குடும்பத்தில் வேறு பெண்கள் இருக்கிறார்களா என்று கேட்கிறார் சோ. இந்த கேரக்டர் அச்சுஅசலாக சோ போன்று தெரியவேண்டும் என்பதற்காகவே வழுக்கை தலையுடன் உள்ள பாஸ்கியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

வேண்டுமென்றே மொட்ட ராஜேந்திரனை சிவன் வேடத்தில் போட்டு கேவலப்படுத்தி உள்ளனர். அதேபோன்று எமதர்மனின் மனைவி ஒரு போதை பைத்தியமாகவும் காட்டப்பட்டுள்ளது. மோடியின் பொருளாதாரக் கொள்கை தொடங்கி, மோடியின் கோட் வரையிலும் படத்தில் கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ஆனாலும், முழுக்க முழுக்க பா.ஜ.க. ஆட்கள் நிரம்பிய சென்சார் போர்டில் இதனை யாருமே பார்க்கவில்லையா அல்லது வேண்டுமென்றே விட்டுள்ளார்களா என்பதுதான் ஆச்சர்யம்.  ஒருவேளை சோ பெயரைக் கேவலப்படுத்தவே இந்தப் படம் எடுத்து வெளியிட்டுள்ளார்களா...? யாமறியோம் பராபரமே.