அல்வா கொடுக்கிறார் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டில் மக்களுக்கு அல்வாதானா..?

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறைப்படி பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட் பிரின்ட் செய்வதற்கு முன்பு, மரபுப்படி அல்வா கிண்டி நிதித்துறை அதிகாரிகளுக்கு வழங்குவது மரபு.


அதன்படி இன்று, நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக் பகுதியில் உள்ள நிதியமைச்சகத்தில் அல்வா கிண்டும் பணியை நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். இதையடுத்து பட்ஜெட் உரை பிரின்ட் செய்யப்படும் பணிகள் தொடங்கியது.

எப்போதும் போல் இந்த ஆண்டும் வேலை செய்பவர்களின் வருமான வரிக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இரும்பு, நிலக்கரி இறக்குமதிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டன.

ஆனால், இவற்றில் நிர்மலா சீதாராமன் நிச்சயம் எதுவும் செய்திருக்க மாட்டார் என்று பா.ஜ.க.வினரே உறுதியாக சொல்கிறார்கள். இன்னமும் நான்கு வருடங்கள் ஆட்சி இருக்கிறது என்பதால், கடைசி வருடத்தில்தான் இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை, மக்களுக்கும் அல்வாதான்.