அடுத்த கவர்னர் நைனார் நாகேந்திரனா? அட, பா.ஜ.க. தமிழக தமிழராகப் போறாராம்!

தமிழிசையின் இடத்தைப் பிடிப்பது யார் என்கிற போட்டியில் இப்போதைக்கு முன்னணி வகிப்பது நைனார் நாகேந்திரன் மட்டுமே.


நல்லா இருந்த ராமநாதபுரம் தொகுதியில் நின்று , தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் யாருக்கு வேணும்னாலும் போடுங்க 'அவனுக்கு' மட்டும் போடாதீங்க என்று பிரச்சாரம் செய்து டெல்லியின் கவனத்தை ஈர்த்து விட்டதாக அவரே சொல்லிக் கொள்ள்ளும் நைனார் இப்போது தமிழக பிஜேபியின் தலைவராக முடிவு செய்து விட்டார்.

இதற்காகவே திருநெல்வேலியில் ஒரு வீடு உட்பட சில சொத்துக்களை விற்றுவிட்டு சென்னையில் ஸ்ட்ரஜிக்கான இடத்தில் வீடுவாங்கப் போகிறாராம்.அதோடு அவர் டெல்லியில் இரண்டு வாதங்களை எடுத்து வைக்கிறாராம்,ஒன்று,இங்கே நடப்பது திராவிட அரசியல்.இங்கே வடகத்தியபாணி வழிகள் எடுபடாது.என் கையில் பொறுப்பை கொடுங்கள் நான் அந்த வழி வந்தவன் என்கிறாராம்.

இரண்டாவது,தமிழக பிஜேபியின் தலைவர்களாய் இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன்பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழிசை யாருமே கை காசை செலவு செயபவர்கள் இல்லை.எனக்கு வாய்ப்புக் கொடுத்து பாருங்கள்.என்கிறாராம். ஹெச்.ராஜா எடுத்திருக்கும் நல்ல பெயரால் அவருக்கு வாய்பில்லை என்கிற நிலையில் கட்சியின் பழம் பெருச்சாளிகள்,குறிப்பாக இரண்டு ஜாதி பின்புலத்தில் இருப்பவர்கள் இதற்கு ஒரு மாற்று வழி சொல்கிறார்களாம்.

தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து மூன்றுக்கும் தனித்தனி தலைவர்களை நியமிக்கலாம் என்பதே அவர்களின் யோசனை.பிஜேபியின் உட்கட்சி தேர்தல் டிசம்பரில்தான் வருகிறது.அதுவரை அகில இந்தியத் தலைவர் நட்டாவைப் போல ஒரு தற்காலிகத் தலைவரைத்தான் நியமிப்பார்கள் என்றாலும்,

தமிழகத்தின் பிஜேபி தலைமைப் பதவியை பிடிக்க கடும் போட்டி நடப்பது ஏன் என்ற கேள்விக்கு நைனார் நாகேந்திரனின் ஆதரவாளர் அடித்த கமெண்ட்தான் சிறப்பு. 'அட,ஒன்னும் நடக்கலன்னாலும் ஒரு நாளைக்கு கவர்னர் ஆகுற வாய்ப்பிருக்குல்ல' என்கிறார் அவர்.