இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு தமிழகத்திற்கு சாதகமானதா..? பொய் சொல்லும் பா.ஜ.க.வை நம்பாதீங்க.

கடந்த சில நாட்களாக நீட் தேர்வு முடிவுகள் தமிழகத்திற்கு சாதகமாக அமைந்திருப்பதாக பா.ஜ.க.வினர் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார் டாக்டர் எழிலன் நாகநாதன்.


அவரது பதிவில், நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது என்ற மாயத் தோற்றத்தை தகர்த்துள்ளது இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி. 720-க்கு 113 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி (cleared) என நிர்ணயத்துள்ளது என்.டி.ஏ. எனும் தேசியத் தேர்வு முகமை. ஒருவர் நீட்டில் தேர்ச்சி பெற்றாலே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம் என பரவலாக கருதுகின்றனர். அது உண்மையல்ல. எம்.பி.பி.எஸ். சேர விண்ணப்பம் போட அந்த மாணவர் தகுதி பெற்றவர் ஆகிறார். அதாவது, நீட் தேர்ச்சி என்பது கணிதத்தில் 100-க்கு 35 எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆவது போல.

இவ்வாண்டு கட்-ஆப் உயர்ந்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் கிடைக்கலாம் என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. 

அரசுப் பள்ளி மாணவர்களில் நீட்டில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான். அரசின் பயிற்சி மையத்தில் படித்து 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்த அரசு உதவிபெறும் மாணவர்கள் இருவர், 495 மற்றும் 497 மதிப்பெண் பெற்ற இரு பிற்படுத்தப்பட் சமுதாய மாணாக்கர்கள் மற்றும் இரு மாற்றுத் திறனாளி மாணவர்கள் என 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

நீட் தேர்வில் தகுதி பெறுதல் என்பது வேறு ... நீட் தேர்வில் அடிப்படையில் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறுவது வேறு ...

(110 -130)/720 நீட் மதிப்பெண் அதாவது 180 கேள்விகளுக்கு வெறும் 30 multiple choice questions சரியாக போட்டாலே போதும் (இதற்கு நீங்கள் எந்த பயிற்சி மையங்கள் போக தேவையில்லை ) நீங்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க தகுதி பெறுகிறீர்கள். ஆனால், இடம் கிடைக்காது.

640 மேல் /720 நீட் மதிப்பெண் அதாவது 180 கேள்விகளுக்கு 160 சரியாக பதில் போட வேண்டும்.அப்போதுதான் அரசாங்க மருத்துவ கல்லூரிகள் மிகவும் குறைவான கட்டணத்தில் நல்ல மருத்துவ அனுபவங்கள் கொண்டு மருத்துவ படிப்பை பெற முடியும்.இதற்கு தான் தனியார் பயிற்சி மையங்களில் ஒரு வருடம் இரண்டு வருடங்கள் மூன்று லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.

ஆனால் ஊடகங்கள், சில காவி பச்சோந்தி கல்வியாளர்கள் மற்றும் பாஜக அரசியல் வாதிகள்.. ரொம்ப சிறிய எண்ணிக்கையில் நீட் தேர்வில் வெறும் தகுதி மட்டும் பெற்ற அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு அரசாங்க மருத்துவ கல்லூரிகள் இடம் கிடைத்து விடும் என்று தவறான எண்ணத்தை உருவாக்குகிறார்கள் பாவம் அந்த அப்பாவி பெற்றோர்களும் குழந்தைகளின் நிலை.அயோக்கியதனம்.

தீர்வு...

1.தமிழ்நாடு அரசாங்க மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் விலக்கு 

2.11 வகுப்பு மற்றும் 12 வகுப்பு அறிவியல் பாடங்களில் கூட்டு மதிப்பெண் சமூக நீதி அடிப்படையில் மருத்துவ cutoff 

3.அதில் அய்யா கலைஞர் திமுக 1996-2001 ஆட்சியில் கொண்டு வந்த 15% கிராமப்புற இடஒதுக்கீடு போல் அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.