கொரோனாவுக்கு எதிராக மோடி உருப்படியாக ஏதாவது செய்தாரா..? வெளுத்துக் கட்டும் ப.சிதம்பரம்.

மோடி இப்போது என்ன பேசினாலும், அது பின்விளைவுகள் தருவதாகத்தான் இருக்கின்றன.


ஆம், கொரோனாவில் வெற்றி அடைந்துவிட்டோம் என்று பேசியது பலத்த விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஏனென்றால், கொரோனா ஆரம்ப காலம் முதல் இன்னமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர, கொஞ்சமும் குறையவே இல்லை. 

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து மோடிக்கு எதிராக கடுமையாக ட்வீட் போட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். படிச்சுப் பாருங்க, ரொம்பவே ஹாட்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார் கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா?

கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள, சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா? புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, வீட்டை இழந்து பட்டினி கிடந்தார்களே - சரியான முடிவா?

ரயில் இன்றி, பஸ் இன்றி பல இலட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே - சரியான முடிவின் விளைவா? பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா?

ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - சரியான முடிவுகளின் பயனா? என்று கேட்டுள்ளார். பதில் சொல்வாரா மோடி..?