மாம்பழம் சாப்பிட்டால் சூடு என்பது உண்மையா?

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்து நிரம்பி உள்ளது. அதனால் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உடலுக்கு பளபளப்பும் சுறுசுறுப்பும் கொடுக்கக்கூடியது மாம்பழம்.


* மாம்பழத்தின் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் மாம்பழத்தில் உள்ளன.

* மாம்பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்று சிலர் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். உண்மையில் குறைந்த அளவு மாம்பழம் சாப்பிடும்போது உடல் உஷ்ணத்தால் பாதிப்பது இல்லை.

* மாங்கொட்டையில் கால்சியம், கொழுப்பு சத்து இருப்பதால், அதனை சுடவைத்து சாப்பிடுவதும் உடலுக்கு நல்லது.

மாம்பழத்தை ஜூஸாக சாப்பிடுவதைவிட, கடித்து சாப்பிடுவது நல்ல பலன் தருகிறது. தினம் ஒரு மாம்பழம் சாப்பிடுவது ஏற்கத்தக்கதே என்பதால் சீஸன் நேரங்களில் மறக்காமல் மாம்பழம் சாப்பிடுங்கள். இயற்கையாக பழுத்த மாம்பழங்களை மட்டுமே  தேர்வு செய்து சாப்பிடவேண்டும்.