எடப்பாடியுடன் மோதுகிறாரா மாபா.பாண்டியராஜன்..? ஆவடி அக்கப்போர்

பெருந்தலைவர் காமராஜரின் பெயரை வைத்து, முதல்வர் எடப்பாடியுடன் மீண்டும் மீண்டும் மோதல் நடத்துவதாக மாபா.பாண்டியராஜன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பா.ஜ.க.வில் தனக்கு இருக்கும் ஆதரவைக் கொண்டே மிரட்டுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் ஒரு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ``காமராஜரின் பெயரால் அழைக்கப்பட்டு வந்த ஆவடி நகராட்சியின் கட்டடம், தி.மு.க ஆட்சியில் பெயரில் நீக்கப்பட்டு பெருநகராட்சி கட்டடம் என்று அழைக்கப்பட்டது.

தற்போது 15-வது மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னரும், அது மாநகராட்சி கட்டடம் என்றே அழைக்கப்படுகிறது. எனவே முன்னர் சூட்டப்பட்டிருந்த காமராஜர் பெயரை, அலுவலகக் கட்டடத்துக்கு சூட்ட வேண்டுமென எனது ஆவடி தொகுதி மக்கள் விரும்புகின்றனர். ஆகவே, இக்கோரிக்கைக்கு முதல்வர் ஆவண செய்ய வேண்டும்’’ என்று கோரியிருக்கிறார்.

இதில் என்ன பஞ்சாயத்து என்று கேட்கிறீர்களா? இந்த கோரிக்கை குறித்து மாபா.பாண்டியராஜன் முதல்வர் எடப்பாடியிடம் நேரடியாகவே பேசிவிட்டார். அப்போது முதல்வர், இப்படி ஒரு கட்டிடத்துகுப் பெயர் மாற்றம் செய்தால், தமிழகம் முழுவதும் இதே கோரிக்கையுடன் ஏராளமான நபர்கள் வருவார்கள். அதனால், இதை மறந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.  

அதன்பிறகும் வேண்டுமென்றே இப்படி கடிதம் எழுதி கட்சிக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறார். அவர் அ.தி.மு.க. என்பதைவிட பா.ஜ.க. என்பது போலத்தான் செயல்படுகிறார். இந்த போக்கை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் சீரியஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

அட, யார் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதுதான் மாபா.வின் தைரியமாக இருக்கக்கூடும்.