மோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..? ஏன் பல்பு வாங்குகிறது பா.ஜ.க.?

எதை செஞ்சாலும் திட்டம்போட்டு செய்யணும் என்று வைகைபுயல் வடிவேலு சொல்வதை ஃபாலோ செய்யாத காரணத்தால், மதுரையில் செமையாக பல்பு வாங்கியிருக்கிறது பா.ஜ.க. வட்டாரம்.


கொரோனா உதவிக்கு மதுரை மோகன் செய்த செயலுக்காக பிரதமர் பாராட்டிய பிறகு, அவரை மதுரை மாவட்ட பா.ஜ.கவினர் சந்தித்தனர். அந்த நேரத்தில் அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளாமல், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பா.ஜ.கவின் உறுப்பினர் அட்டையைக் கொடுத்தனர். அதுமட்டுமின்றி, அவர் பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டதாகவும் செய்தி கொடுத்தனர்.

ஆனால், அதன்பிறகுதான் தன்னை வைத்து பா.ஜ.க. போட்ட நாடகம் மோகனுக்குத் தெரியவந்தது. உடனே, ‘பிரதமர் என்னைப் பாராட்டியது மகிழ்ச்சிதான். ஆனால், நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. எல்லோரும் எனக்கு வேண்டுமென நினைக்கிறேன்" என்று பிபிசியிடம் கூறினார் மோகன்.

பிறகு ஏன் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டாராம்..?

‘‘அது பாராட்டு அட்டை என்று நினைத்தேன். மேலும் என்னை பாராட்ட வந்தவர்கள்க்கொடுத்ததை, மறுப்பது சரியாக இருக்காது என்பதால் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நான் கட்சியில் சேர்வது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை’’ என்றும் கூறியிருக்கிறார்.

என்னடா இது, பா.ஜ.க.வுக்கு வந்த சோதனை