பிக்பாஸ் மதுமிதாவுக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 80 ஆயிரமா?

எதிர்பாராத திடுக் திருப்பமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரில், “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே செல்லும்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கெனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார்.

மீதமுள்ள ஒரு நாளுக்கு ரூ.80000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தோம். அதை அப்போது ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார்.

பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்’’ என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு நடிகை மதுமிதாவுக்கு 80,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை மதுமிதா, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது.

ஆனால் தனக்கு தர வேண்டிய நிலுவை தொகை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்டரீதியாக எதிர் கொள்வேன்’’ விளக்கமளித்துள்ளார். நல்லாயிருக்கே இந்த பஞ்சாயத்து.