என்னாது மாரிதாஸ் ஒரு முட்டாளா? பிறகு எதுக்கு உபிஸ், அவர் மீது வழக்கு போடுறீங்க?

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பார்கள்.


அந்த ஒரு நிலையில்தான் இப்போது தி.மு.க. இருக்கிறது. ஏனென்றால், தி.மு.க.வுக்கு ஐ.டி. விங்க் இருப்பது போன்று பா.ஜ.க.வில் உள்ள ஒரு பெருந்தலைவருக்காக (?) தனிப்பட்ட முறையில் காசு வாங்கிக்கொண்டு வேலை பார்க்கும் நபர்தான் மாரிதாஸ் என்பத் ஊரறிந்த விஷயம்.

புள்ளிவிபரப் புலி போன்று இல்லாததையும் பொல்லாததையும் மிகச்சிறப்பான புள்ளிவிபரம் போன்று ஹைடெக்காக மாற்றி கிளாஸ் எடுப்பார். இப்படித்தான் மாற்றம், முன்னேற்றம் என்று அன்புமணி ஹைடெக்காக மாறி நாறிப் போனார் என்பது புரியாமல், இப்போது தேவையில்லாமல் மாரிதாஸ் மீது கேஸ் போட்டு அவரை பெரிய மனிதராக்கி இருக்கிறது தி.மு.க.

ஏனென்றால், அவதூறு பரப்புகிறார். குரங்கு என்றால் சேட்டை செய்யத்தான் செய்யும். காசு கொடுத்தால் தி.மு.க. டீம் செய்வது போல் அவரும் செய்யத்தான் செய்வார்.

ஆனால், ரசிகர்கள் புத்திசாலிகள். அவரது இரண்டு வீடியோக்களை பார்த்தாலே, எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். அரைகுறை அறிவு, உளறுவாயர், முட்டாள், கோமாளி என்று எளிதாக புரிந்துகொள்வார்கள்.

அதற்கு உதாரணம் வேண்டும் என்றால், 2006 லருந்து 2011 வரை சமச்சீர் கல்வியால் பாதிக்கபட்ட மாணவர்கள் 25 லட்சம் பேர் என்று ஒரு பட்டியல் போட்டுக் காட்டுவார். அவரிடம் 2010ம் ஆண்டுதானே சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது என்று கேட்டால், உடனே விளக்கம் வராது. 

இப்படிப்பட்ட நபரையும் டிரெண்டிங் ஆக்குறதுல கில்லாடி தி.மு.க.தான். எப்போ உடன்பிறப்புகளே உங்களுக்கு புத்தி வரப்போகுது?