தமிழ்நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு ஹாலிவுட் நடிகர் வரையிலும் குரல் கொடுத்துவருகிறார்.
எடப்பாடி அரசு மீது ஊழல் புகார் கூறும் கிரண்பேடி! தமிழக ஆளுநர் பதவிக்கு குறி...?

ஆனால், நம்முடைய அமைச்சர்கள் மட்டும்தான் விஞ்ஞான ரீதியாக, தமிழகத்தில் இருப்பது தண்ணீர் பற்றாக்குறைதான், தண்ணீர் பஞ்சம் அல்ல என்று சொல்லிவருகிறார்கள்.இந்த நிலையில் பக்கத்து வீட்டில் இருந்து தமிழகத்தின் மீது பெரிய கல் எறிந்திருக்கிறார் ஒருவர். ஆம், புதுவை மாநில கவர்னராக இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரியான கிரண்பேடி, தண்ணீர் பஞ்சம் விவகாரத்தில் தமிழகத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.
கிரண்பேடி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மோசமான நிர்வாக சீர்கேடுகளும் ஊழல் அரசியலும்தான் காரணம்...’’ என்று ஓங்கி குரல் கொடுத்திருக்கிறார். மேலும் தமிழக மக்கள் கோழைத்தனமான எண்ணங்களை கொண்டுள்ளனர்" என்று கருத்து சொல்லியிருக்கிறார்.
இவர் எப்படி இப்படியொரு கருத்து சொல்லலாம் என்று தமிழக அமைச்சர்கள் கொந்தளித்தாலும், எந்த அமைச்சருக்கும் நேரடியாக கிரண்பேடியை தாக்கி அறிக்கைவிட துணிச்சல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர் மோடியின் ஆள் என்பதுதான். சமீபத்தில் நடந்த தேர்தல் விவகாரத்தில் சொதப்பிய தமிழக கவர்னருக்கு விரைவில் கல்தா கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஏற்கெனவே செய்திகள் கசிந்தன. அந்த வகையில் இப்போது கிரண் பேடி பேசியிருப்பதை மேட்ச் செய்து பார்த்தால், அடுத்து தமிழக கவர்னராக வரும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இங்கே வந்து என்னென்ன சண்டை போடப்போறாரோ..?