மோடிக்கு வேண்டிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதாயத்துக்காகத்தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதா?

அதானி, அம்பானி போன்ற மோடிக்கு வேண்டப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத்தான், காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதாக பலரும் குரல் கொடுத்துவருகிறார்கள்.


இந்தக் கருத்தில் அடிப்படை உண்மையே இல்லை. ஏனென்றால், இந்தியாவில் இயங்கும் எல்லா கார்ப்பரேட்டுகளும் காஷ்மீரிலும் உள்ளனர். ரிலையன்ஸ், பஜாஜ், பியட், டாடா, ஏர்டெல், மாருதி, ஜேபி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், சோனி, எல்.ஜி, சாம்சங், ஹூண்டாய், டொயோட்டா என எல்லோருமே காஷ்மீரில் உள்ளன.

காஷ்மீரில் நிலம் வாங்கக் கூடாது என்பதெல்லாம் சாதாரண மக்களுக்குத்தான். இந்த முதலாளிகள் எல்லோருமே தங்கள் அலுவலகங்களையும், ஆலைகளையும் இங்கே ஏற்கெனவே  நிறுவி செயல்பட்டு வருகின்றனர். தவிர ராணுவமும் ஏராளமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. 

அதனால் இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த அந்தஸ்து நீக்கம் மூலம்தான் பயன் கிடைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. 

ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தியா என்ற நாடு முழுவதும் ஒரே சட்டம், திட்டம் இருந்தால்தான், இந்த வணிக நிறுவனங்களால் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்குத்தான் வழி வகுக்கிறது இந்த சட்டம். அதோடு, இஸ்லாமியர்களை அவர்களுடைய கோட்டையிலே போய் அடித்து நொறுக்கியிருக்கிறது பா.ஜ.க. விளைவுகள் என்னவென்பது விரைவில் தெரியவரும்.