மணிகண்டன் நீக்கத்துக்குக் காரணம் கருணாஸா..? யார் சொல்றது? கருணாஸ்தான்!

முதல்வரைப் பற்றி தரக்குறைவாகப் பேசியது, உடுமலை ராதாகிருஷ்ணன் பற்றி வெளிப்படையாக விமர்சனம் செய்ததுதான் மணிகண்டன் பதவி பறிப்புக்குக் காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில்,


தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம், ‘நான்தான் மணிகண்டனை பதவியில் இருந்து நீக்கினேன்’ என்று சொல்லி வருகிறாராம் கருணாஸ். என்னுடைய சொந்தத் தொகுதிக்குப் போய் என்னால் மக்கள் பணி செய்யவே முடியவில்லை என்று மிகவும் வேதனைப்பட்டவர் கருணாஸ் எம்.எல்.ஏ. ஏனென்றால், அவரை ஏரியாவுக்குள் வரவிடாமல் விரட்டி அனுப்பியிருந்தார் மணிகண்டன்.

அதுமட்டுமின்றி, எந்தவொரு அரசு பிராஜெக்ட் விவகாரமும் கருணாஸ் பக்கம் போய்விடாமல் பார்த்துக்கொண்டார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமியிடம் பல முறை புகார் சொல்லியும், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், கடந்தவாரம் சொந்தத் தொகுதிக்குள் நுழைந்தார் கருணாஸ். அவருக்கு அரசு மூலம் போதிய ஆதரவு வழங்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். கருணாஸ்க்கு எந்த சிக்கலும் தரக்கூடாது என்று அப்போதே சொல்லப்பட்டதால்தான், மணிகண்டன் அமைதி காத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு வாரத்துக்கு முன்னரே பதவியில் இருந்து மணிகண்டனை நீக்கும் முடிவுக்கு முதல்வர் வந்துவிட்டார், அது தெரிந்துதான் நான் ஏரியாக்குப் போனேன். நான் சொன்னதைக் கேட்டுத்தான் அவரை பதவியில் இருந்து நீக்கினார்கள் என்றெல்லாம் கருணாஸ் சொல்வது உண்மையா என்பதை எடப்பாடியார்தான் சொல்ல வேண்டும்.