அமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..? திகிலில் அமைச்சர்கள்!

சமீபத்தில் அ.தி.மு.க. அமைச்சர்களின் பி.ஏ.க்கள் 9 பேர் விபத்தில் சிக்கி மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.


இது ஜெயலலிதா ஆவியின் பலி வாங்கும் செயல்தான் என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள் என்று தமிழக இதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அமைச்சர் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், ஓ.பன்னீர்செல்வம் என்று அமைச்சர்களின் பி.ஏ.க்கள் 9 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

தமிழக அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் மந்திரக் கட்டுக்குள் இருப்பதால், அவர்களை தாக்க முடியாமல், அவர்களுடைய பி.ஏ.க்களை தாக்கி எச்சரிக்கை செய்கிறது என்று மலையாள ஜோதிடர் வேங்கட சர்மா தெரிவித்து இருக்கிறார்.

இதனால் பதறிப் போயிருக்கும் அமைச்சர்களின் பி.ஏ.க்கள் பலரும் ஒன்றுசேர்ந்து மீட்டிங் நடத்தியிருக்கிறார்கள். அதன்படி, ஒதுவாக சிறப்பான யாகம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். கேரளாவில் இருந்து மிகப்பெரிய மந்திரவாதி ஒருவரைக் கொண்டுவந்து ஜெயலலிதா ஆவியை கட்டிப்போட முயற்சி செய்து வருகிறார்களாம்.

அதனால், ஜெயலலிதா பெயரைச் சொன்னாலே சும்மா அலறுகிறார்கள் அமைச்சர்கள்.