இனிமே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதறது வீண்தானா..? சிறப்பு மையினால் இப்படி மோசம் பண்றாங்களே...

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் கனவாக இருப்பது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுதான். எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து எழுதி பாஸாகிவிட்டால், நிம்மதியாக அரசு உத்தியோகத்துக்குப் போய்விடலாம் என்று நினைக்கிறார்கள்.


அப்படியெல்லாம் யாரும் போகமுடியாது. புரோக்கர் மூலம் பணம் கொடுத்தால்தான் காரியம் ஆகும் என்று சொல்லியிருக்கிறது, சமீபத்தில் நடந்த நிகழ்வு. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர்களை டி.என்.பி.எஸ்.சி தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து பல கட்ட விசாரணைகளில் நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களில் எழுதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 நபர்களுக்கு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டது.

இந்த முறைகேட்டில் 52 தேர்வர்கள் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் விடைத்தாளில் உடனடியாக அழியக்கூடிய மையினால் விடை எழுதியதாகவும், பின்னர் அந்த மை காய்ந்துபோனதும், சரியான விடையை எழுதி அனுப்பப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இடைத்தரகர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம், கீழக்கரை தவிர வேறு எங்கும் முறைகேடு நடைபெறவில்லை என்று சொல்லப்படுவது நம்புவது போல் இல்லை என்பதுதான் உண்மை.