வேந்தர் டிவியில் இருந்தும் விரட்டி அடிக்கப்பட்ட பாண்டே..! பரபரப்பு காரணம்!

தந்தி தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரங்கராஜ் பாண்டே அதே பதவி கேட்டு பல்வேறு தொலைக்காட்சிகளை தொடர்புகொண்டார். யாரும் அவரை பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை.


அதனால், வேறு வழியே இல்லாமல் சாணக்கியா என்ற டிஜிட்டல் டி.வி.யை தொடங்கினார். அதன்பிறகு வேந்தர் டி.வி.யில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது ஆறு மாத காலத்திற்குள் வேந்தர் டி.வி.யை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு களத்தில் இறங்கினார். 

அதாவது தந்தி தொலைக்காட்சியில் அவர் பேட்டி எடுத்தால் அனைவரும் அமர்ந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில், அதே போன்று வேந்தர் தொலைக்காட்சியையும் அரசியல் தொலைக்காட்சியாக மாற்றிவிடலாம் என்று ஆசைப்பட்டு இறங்கினார்.

ஆறு மாதங்களில் வேந்தர் தொலைக்காட்சிக்கு வழக்கத்தை விட பெரிய நஷ்டம் என்கிறார்கள். ஏனென்றால், இவரது டீமுக்கு கொடுத்த செலவுத் தொகை எக்கச்சக்கம். இந்த நிலையில்தான் இன்று ரங்கராஜ் பாண்டே ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதாவது, சாணக்கியா டி.வி.க்கும் வேந்தர் டி.வி.க்குமான ஒப்பந்தம் நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது என்று இப்போதே போட்டுள்ளார். இதை பார்த்தாவது மீண்டும் ஒப்பந்தத்தை நீட்டிப்பார்களா என்ற நப்பாசைதான் காரணமாம். ஆனால் ரங்கராஜ் பாண்டே தொலைந்தால் போதும் என்று வேந்தர் டிவி நினைக்கிறது.

அதே நேரம் பா.ஜ.க.வின் தாமரை தொலைக்காட்சியின் டி.ஆர்.பி.யை கூட்டிக் காட்டுவதற்கு ஒரு பிளான் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எது நடக்கிறது என்று பார்க்கலாம்.