ராம்ஜெத்மலானி பாதி தமிழன் என்பது தெரியுமா? கடைசி நொடி வரை தமிழர்களுக்காக வாதாடியவர், போராடியவர்!

ராம்ஜெத்மலானிக்கு தமிழ்நாட்டின் மீது அபார பிரியம். ஏனென்றால் அவரது அம்மா சுத்தமான தமிழச்சி. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அப்பா வடநாட்டுக்காரர். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் எப்போதும் நான் பாதி தமிழன் என்று சொல்வார்.


கடைசி நொடி வரையிலும் கோர்ட்டில் வாதாட விரும்பியவர் மலானி. அவர் தள்ளாத 93 வயதில் கோர்ட்டில் வாதாட வந்தார். அப்போது அவரிடம், ‘நீங்கள் எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்?” என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்குர் எழுப்பினார்.

எம்.எம். காஷ்யப் என்ற சக வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் 93 வயதான நிலையிலும் ராம் ஜெத்மலானி ஆஜரான போது அதிர்ந்து போய்த்தான் தலைமை நீதிபதி தாக்குர் அப்படி கேட்டார். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்த்திராத ராம் ஜெத்மலானி தலைமை நீதிபதியைப் பார்த்து எதிர் கேள்வி கேட்டார். அதைக் கேட்டு தலைமை நீதிபதி தாக்குர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அப்படி என்னதான் கேட்டு விட்டார் என்கிறீர்களா? இதோ அந்தக் கேள்வி-

நான் எப்போது இறக்கப் போகிறேன் என்று மாண்புமிகு நீதியரசர் ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டார். மரணம்தான் எனக்கு ஓய்வு என்று சுட்டிக் காட்டினார் ராம்ஜெத்மலானி. இனியாவது அவர் ஓய்வு பெறட்டும்.