வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் பயிர் வகைகளில் அவரைக்காய்க்கு தனி இடம் உண்டு. எளிதில் விளைந்து பலன் தரக்கூடிய அவரைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
அவரைக்காய் சாப்பிட்டால் பித்தம் தீருமென்பது உண்மையா..?
அவரைக்காயில் பிஞ்சுக் காயை பயன்படுத்துவது மிகுந்த நன்மை தருகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது என்பதால், அவரையில் இருக்கும் சத்துக்கள் உடலில் விரைந்து சேர்கின்றன.
·
பித்தத்தினால் உண்டாகும் உடல் சூடு, கண் பார்வை குறைபாடு போன்றவற்றை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருகிறது அவரை.
·
அவரை பிஞ்சில் துவர்ப்புதன்மை இருப்பதால், ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
·
கோபம், எரிச்சல், பதட்டம், படபடப்பு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதியும் அமைதியும் கொடுக்கிறது அவரைக்காய்.
·
சருமத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் தன்மை அவரைக்கு உண்டு என்பதால், தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் பளபளப்பாகும்.
அவரையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், ஒருசில நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. அத்துடன் எலும்புக்கும் வலிமை தருகிறது.