ஒற்றை சிறுநீரகம் இருப்பது ஆபத்தா? மருத்துவ பதில் !

ஆயிரத்தில் ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. பெரும்பாலானவர்கள், தங்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருக்கிறது என்பதை அறியாமலே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள். அதனால் ஒரு சிறுநீரகம் இருப்பதால் எந்த ஆபத்தும் கிடையாது.


* சிறுநீரகத்தில் கட்டி, கிருமித் தாக்குதல், கல் போன்றவை ஏற்படும்போது ஒரு சிறுநீரகம் இருப்பவர்களுக்குச் சிக்கல் அதிகமாகிறது.

* அதனால் சிறு வயதிலேயே இரண்டு சிறுநீரகம் இருக்கிறதா என்று குழந்தைக்கு பரிசோதனை செய்துவிடுவது நல்லது.

* ஒரு சிறுநீரகம் இருந்தால் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துவந்தாலே... சிறுநீரக நோய்களில் இருந்து தப்பித்துவிட முடியும்.

ஒற்றை சிறுநீரகம் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற எதுவும் பிரத்யேகமாகச் செய்யவேண்டியது இல்லை. வருடாந்திர பரிசோதனை மட்டுமே போதுமானது.