பசுமைக் காடுகள் திட்டம் ஆபத்தானதாம்! வந்துட்டாங்கப்பா இயற்கை ஆர்வலர்கள்!

போர்பந்தர் முதல் பானிபட் வரை இந்திய பசுமை பெருஞ்சுவர் திட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மிகப்பெரிய அளவிலான நிலப்பரப்பை தேர்வுசெய்து அதன் முழுப்பரப்பிலும் புதிதாக மரங்கள் வளர்க்கப்பட்டு, காடுகள் உருவாக்கப்பட்டு ஒரு பெரிய கிரீன் பெல்ட் அமைப்பதே இந்த கிரீன் வால் திட்டம்.

இது குறித்து கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான சுந்தர்ராஜன், பசுமைச் சுவர் அமைப்பது சரியான விஷயம் தான். ஆனால் பல மாநிலங்களில் வளமாக இருந்த இயற்கையான காடுகளை அழித்து விட்டு செயற்கையான காடுகளை அமைப்போம் என்று சொல்வது சரியான பார்வையாக இருக்காது.

இருக்கும் இயற்கையான காடுகளை பாதுகாக்கப்பட்டு , புதிய காடுகளை உருவாக்க வேண்டும். காடுகளை அழிப்பது, நிலக்கரி சுரங்கம் அமைப்பது, நியூட்ரினோ திட்டம் அமைப்பது போன்ற எதிரான திட்டங்களை செய்துகொண்டு பசுமை திட்டங்களை செய்து வருவதாக கூறுவது முரணான ஒன்று.

ஜார்கண்ட் ,சதீஸ்கர் ,மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் வளம் அதிகமாக இருக்க கூடிய காட்டை அழித்து விட்டு நிலச் சுரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே இருக்கக்கூடிய வளங்களை மத்திய அரசு கை வைக்க மாட்டோம் என்ற உறுதி மொழியும் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.