அச்சச்சோ, பொறியியல் கல்லூரி கட்டணம் கூடியாச்சு..!

திரும்பிய பக்கமெல்லாம் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கியதால், இப்போது மூன்று பேருக்கு ஒருவர் பொறியியல் பயின்றவராக இருக்கிறார்.


அதில் பாதிக்கும் மேலாக வேலை இன்றி திரிகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அதனால் இப்போது ஏராளமான பொறியியல் கல்லூரிகளை மூடிவிட்டு கலைக்கல்லூரியாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், ஏஐசிடிஇ எனப்படும் ஆல் இந்தியா கவுன்சில் ஆஃப் டெக்னிக்கல் எஜுகேசனின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கல்விக் கட்டணம் மற்றும் பேராசிரியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், இந்த ஆண்டு, நிர்வாக ஒதுக்கீட்டுக் கட்டணத்தை ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.58 லட்சமாகவும் அரசு ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டணத்தை 8 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தவும் உள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரத்தால், இந்த ஆண்டு பொறியியல் படிப்பு மேலும் பாதிக்கப்படும் என்கிறார்கள். பாவம்தான்.