ராஜேந்திர பாலாஜியை எடப்பாடி திட்டுனாரா இல்லையா? சீக்ரெட் அம்பலம்

சசிகலா வெளியே வரணும்னு ஆசைப்படுறேன் என்று அப்பட்டமாகத் தெரிவித்த ராஜேந்திரபாலாஜியின் பேச்சு, மற்றவர்களுக்கு எப்படியோ எடப்பாடி டீமுக்கு பெரிய அபாய சங்காக ஒலித்தது.


அதனால்தான் திங்கள் அன்று அனைத்து அமைச்சர்களையும் தனித்தனியே சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. ரகசிய பேச்சுவார்த்தை என்று சொல்வதை விட, ஒரு சிலருக்கு ரெய்டும் ஒருசிலருக்கு ஷொட்டும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

முதல்வர் அறைக்குப் போய்வந்த ராஜேந்திர பாலாஜியைத்தான் அத்தனை பேரும் ஆர்வமாக பார்த்துவந்தனர். உள்ளே போய்விட்டு வெளியே வந்தவர் எப்போதும்போல, ‘என்ன...என் மூஞ்சையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க‘ என்றபடி நகர்ந்துவிட்டார்.

இப்போதுதான் உள்ளே நடந்த ரெய்டு வெளியே வந்திருக்கிறது. ‘தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதை இன்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் மணிகண்டனுக்கு என்ன நடந்ததோ அதுதான் நிகழும்‘ என்று எச்சரிக்கை செய்யப்பட்டதாம்.

ஆனால், அதனை ராஜேந்திரபாலாஜி கொஞ்சமும் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லையாம். அட, எனனத்தையோ வாய்க்கு வர்றதைப் பேசிட்டு வர்றேன். இதைப் போய் சீரியஸா எடுத்துக்கிட்டு என்று கிளம்பிவிட்டாராம்.

ராஜேந்திரபாலாஜி நல்லவரா, கெட்டவரான்னு தெரியாம விழிக்கிறாராம் எடப்பாடி.