தி.மு.க.வின் நேருவுக்கும் டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் தொடர்பா..? போட்டுத் தாக்கும் அமைச்சர் ஜெயகுமார்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் அ.தி.மு.க.வினர் ஊழல் செய்ததாக செய்திகள் பரபரக்கின்றன. குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் ஏகப்பட்ட ஊழல் செய்திருக்கிறார் என்று செய்திகள் வலம் வருகின்றன.


இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. ஊழலில், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ஜெயக்குமார். அப்போது, ‘கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் பரிந்துரை கடிதங்கள் முறைகேடு தொர்பான சோதனையின் போது, அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் சிக்கியிருக்கிறது’ என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட நபருக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கும் கடிதம் மூலம், தி.மு.க.வினர்தான் ஊழல் செய்திருப்பது உறுதியாகியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஜெயக்குமார்.

ஆக, தி.மு.க. என்ன பதில் சொல்லப்போகிறதோ..?