ஜேப்பியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆபத்து? கிறிஸ்தவ மிஷனரிகளுடன் ரகசிய தொடர்பு? ஸ்கெட்ச் போடும் மோடி அரசு!

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த ஜேப்பியார் தொடங்கிய சத்யபாமா கல்வி நிறுவனம்.


இந்த நிறுவனத்திற்கு சென்னை மற்றும் பிற பகுதிகளில் பொறியியல் கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரி, நர்ஸிங் கல்லூரி, இண்டர்நேஷனல் பள்ளிக்கூடங்கள் என 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்தக் குழுமத்தில் திடீரென வருமான வரித்துறை சோதனையில் கிறிஸ்தவ என்.ஜி.ஓ.க்களுக்கு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஆதாரம் கிடைத்திருப்பதாகவும், அதனால் கல்வி நிறுவனத்துக்கு ஆபத்து என்று அலறுகிறார்கள்.

வருமான வரித்துறை சோதனையின் போது 1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நூறு கோடிகள் பணம், கணக்கில் வராத பல ஏக்கர் நிலப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.  

இந்த நிறுவனங்களை சிறுபான்மையினருக்கான சிறப்பு அந்தஸ்தின்படி பதிவு செய்து பல சலுகைகளை இதுவரை பெற்று பல ஆயிரம் கோடிகளைக் கொள்ளை அடித்துள்ளதாக தெரிய வருகிறது. 

ஜேப்பியார் பற்றியும் இப்போது பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகிறது. ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர் என்பதாலும், தமிழக அமைச்சராக இருந்தவர் என்பதாலும், எதிரிகளை கொடூரமாக தண்டித்ததாக சொல்லப்படுகிறது. இவர் இப்போது இல்லை என்றாலும், அவரது வாரிசுகளான இரண்டு பெண்களுக்கு இடையில் கடுமையான சண்டை நடக்கிறது.

லயோலா கல்லூரி பாதிரியார்கள்தான், அவர்களைச் சமாதானப்படுத்தி நிர்வாகத்தை பிரித்துக் கொடுத்துள்ளனர். கடந்த மோடி ஆட்சியின் போது மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ என்.ஜி.ஓ.க்களின் வரவு செலவுகளை ஆராயும் போது, பல என்.ஜி.ஓ.க்களின் பல ஆயிரம் கோடிகள், வருடாந்தோறும் பண பரிவர்த்தனைகள் இவர்கள் நடத்தும் கல்லூரிகளின் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

ஜேப்பியாரின் இரண்டாவது பெண் ரெஜினா போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தன் கல்லூரித் தோழன் மற்றும் காதலன் இயக்குநர் அட்லி மற்றும் கள்ளக் காதலன் நடிகர் ஆர்யா அவர்கள் உதவியுடன் லயோலா கல்லூரி விஸ்காம் பிரிவு மாணவர்களைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தைத் தூக்கிப் பிடிக்கும் பல சினிமாக்களுக்கு பண உதவி செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த ஒருவரை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியது இந்த கும்பல். அவர் மாறாமல் யூ ட்யூப் வழியாக செய்தியை போட்டுடைத்துள்ளார்.தீபாவளியன்று ரிலிஸ் ஆகிய நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் விளம்பர செலவுகளையும் விஜய் போட்டிருந்த 2000 ரூபாய் பெறுமானமுள்ள காவி வேட்டி, கருப்பு சட்டை, கிறிஸ்தவ டாலர் ஆகியவை ரசிகர்களுக்கு இலவசமாக இந்த நிறுவனம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.  

இந்து ரசிகர்களைக் கிறிஸ்தவ சிலுவை டாலரை சுமக்க வைப்பதே இவர்கள் நோக்கம். இவை அனைத்துக்கும் மூளையாக செயல்படுவது லயோலா கல்லூரி நிர்வாகம், விஸ்காம் துறை பேராசிரியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.  

கல்லூரி முடக்கப்படுமா, சொத்துக்கள் பறிமுதல் செய்யபடுமா என வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘சோதனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் நினைத்ததைவிட அதிகமாக தணிக்கை செய்ய அதிகம் அதிகாரிகள் தேவை என்பதால் மீண்டும் சோதனை செய்ய முடிவெடுத்துள்ளோம். அப்போதுதான் முடிவு தெரியும்’’ என்றனர்.

மாணவர்கள்தான் பாவம்.