அழகிரியை பேச வைத்தது பா.ஜ.க.வா..? நவம்பர் மாதம் அடுத்த அதிரடியாமே?

நீண்ட நாளாக மவுன விரதத்தில் இருந்த அழகிரி திடீரென வாய் திறந்து தி.மு.க. மீது கடுமையாக ஒரு விமர்சனத்தை வைத்தார். ஒரு தனியார் சேனலுக்கு அழகிரி கொடுத்த ஆடியோ பேட்டியில்தான் அவரது அதிருப்தி வெளிப்பட்டது.


அதில் பேசிய அழகிரி, ‘திமுக vs பாஜக குறித்து எதையும் கூற நான் விரும்பவில்லை. திமுகவில் பதவி தான் அனைத்தையும் தீர்மானிக்கும். மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவது நடந்தே தீரும். இத்துடன் பதவி மட்டும் தான் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கூறி விட முடியாது. என கூற முடியாது. தேர்தலுக்குப் பின்னர் மேலும் பல இன்னல்களை சந்திக்கும்’ என்று தெரிவித்தார்.

திடீரென அழகிரி பேசியதற்கு என்ன காரணம் என்று அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, யாருக்கும் தகவல் தெரியவில்லை. ஒருசிலர் மட்டும், சமீபத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த மேலிடத் தலைவர்கள் சிலர் அண்ணனிடம் பேசினார்கள், அதன் வெளிப்பாடாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

தி.மு.க.வில் இருந்து நவம்பர் மாதத்திற்குள் சமாதான உடன்படிக்கை ஏற்படாவிட்டால், அழகிரி அடுத்த மூவ் எடுத்து அதிரடி காட்டுவார் என்று தெரிவித்தனர். இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா எப்பூடி..?