பிகில் கதையும் திருட்டுதானா? தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் விஜய் படங்கள்! சொந்தமா யோசிக்க மாட்டீங்களாப்பா?

ஏற்கனவே சர்கார் படக் கதை என ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது விஜய் நடித்துள்ள பிகில் படமும் தன்னுடைய என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் நீதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற கதவை தட்ட உள்ளார்.


இந்நிலையில் விஜயை வைத்து திரைப்படங்கள் எடுக்கும் இயக்குநர்கள் மற்றவர்களின் கதையை திருடி படம் எடுப்பதாக பிரச்சனை மேலோங்கியுள்ளது.ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் வெளியாகும்போதும் அந்த படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் கூறுவதும் பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதும் என வாடிக்கையாகி போய்விட்டது.

முதலில் கத்தி படத்தில் தொடங்கிய சர்ச்சை, பிகில் வரை நீண்டு கொண்டே இருக்கிறது. கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் 63வது படமான பிகில் படத்தின் கதை தான் எழுதியது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். 

5 மாதம் கீழமை நீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கில் எந்த முன்னேற்றம் இல்லாததாலும், உயர்நீதிமன்றத்தில் மட்டுமே காப்புரிமை வழக்குகள் நடத்த முடியும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டதாலும் வழக்கை திரும்பபெற்றதாகக் கூறியிருக்கிறார் செல்வா.

மேலும் கீழமை நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்த நிலையில் பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் கடந்த சனிக்கிழமை அறிக்கை விளக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் கதை திருட்டு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாக இயக்குநர் கே.பி.செல்வா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பொதுமக்கள் சினிமா நன்றாக ஓடுவதற்கு விளம்பரம் தேடிக் கொள்வதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி மற்றும் சர்க்கார் பட கதைகளும் திருடப்பட்டவை என சர்ச்சை எழுந்து வழக்குகள் போடப்பட்ன.

இதில் கத்தி படத்திற்கு எதிராக போடப்பட்ட வழக்கை கோபி நயினார் பல சர்ச்சைகளுக்குப் பிறகு வாபஸ் பெற்றார். சர்க்கார் படத்தில் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் வருண் ராஜேந்திரனும் சங்கத்தில் புகார் அளித்தார். 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, சத்ரியன் படத்தின் தழுவல் என்றும், மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் தழுவல் என்றும் புகார்கள் எழுந்தது. இந்த வரிசையில் தற்போது பிகில் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. விஜய் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்துமே திருடப்படுகிறதாக என்று ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.