சந்தானத்துக்குப் பயப்படுகிறாரா டகால்டி அன்புமணி? வம்பிழுக்கும் வன்னியரசு!

விஜய் சிகரெட் குடித்ததைக் கண்டித்த அன்புமணி, சந்தானம் சிகரெட் குடிப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன், சந்தானத்துக்கு அவர் பயப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு.


அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ‘சர்க்கார்’ பட விளம்பர போஸ்டரில் நடிகர் விஜய் புகை பிடிக்கப்படுவது போல விளம்பரம் இருந்தது. உடனே மருத்துவர் அன்புமணியுடமிருந்து 

எச்சரிக்கையும் கண்டனமும் வந்தது. புகையிலை பிடிக்க கூடாது என்று தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். இந்த பரப்புரை அரசியலுக்கும் வணிகத்துக்கும் தானோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

ஏனென்றால், நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டகால்டி’ படத்தின் இந்த விளம்பரம் மருத்துவர் அன்புமணியின் கண்களுக்கு படவில்லையா?  அல்லது வேறு எதுவும் காரணமா? புகையிலை எதிர்ப்பு கொள்கை என்றால் யாவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். ஆனால், அன்புமணியின் அணுகுமுறை விருப்பு,வெறுப்பு, உறவு, பகை அடிப்படையில் அமைந்திருப்பதாக அமைந்துள்ளது. 

நாடக அரசியலை போல புகையிலை அரசியலும் மக்களிடம் இனி எடுபடாது. அன்புமணியின் இந்த ‘டகால்டி’வேலையும் ‘பிஸ்னஸ்’தானோ? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.