போருக்கு ஆயத்தமாகிறதா அமெரிக்கா..? பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் ஆகப்போகிறது!

அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபோதே, முட்டாள்தனமாக எதையாவது செய்து உலகிற்கு ஆபத்து விளைவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படித்தான் நடந்துவருகிறது.


அமெரிக்காவின் வான் தாக்குதல் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சுலைமானி ஹஷீத் கிளர்ச்சி குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் கமாண்டர் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து வளைகுடா நாடுகள் அனைத்தும் கடும் கோபத்தில் உள்ளனர். இஸ்ரேல் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் படியே ஈரான் கமாண்டர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுப்பதற்கு ஈரான் தயாராக இருக்கிறது. 

இந்த நிலையில் கச்சா எண்ணெய் கிடுகிடு என உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முக்கியமான இருக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இந்த தாக்குதலுக்கு பிறகு, மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் ஏற்படும் அச்சத்தில் கச்சா எண்ணெயின் விலை திடீரென அதிகரித்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு இந்த மாதமே 100 ரூபாய்க்கு எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இந்தியா பொருளாதார மந்தத்தில் தடுமாறும் நேரத்தில், இன்னும் எத்தனை சுமைகள் இந்தியா மீது விழப்போகிறதோ..?