தமிழுக்கு விஜய் செய்த துரோகம்! அது என்ன பிகில்?

ரஜினிகாந்திற்குப் பிறகு தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக பேசப்படுபவர் நடிகர் விஜய்.


இவருக்கும் அரசியல் ஆர்வம் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது தமிழகத்தைக் காப்பாற்றும் ஆசை இருக்கிறது. ஆனால், தன்னுடைய சினிமாவில் மட்டும் தமிழ் இருக்காது. ஆம், இவர் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்களைப் பார்த்தாலே இவரது தமிழ் பற்று பற்றிக்கொண்டு எரியும். சமீபத்தில் வெளியான சர்க்காரும் இப்போது வரப்போகும் பிகில் படமும்தான் முக்கிய சாட்சி. 

இதுதவிர ஏதேனும் பரபரப்பைக் கிளப்பி அதை வியாபாரமாக்குவதுதான் விஜய் ஸ்டைல். அதையும் இந்தப் படத்தில் தெளிவாக செய்திருக்கிறார். ஆம், அவரது பிகில் ஃபர்ஸ்ட் லுக்கில், காவி வேட்டி கட்டிக்கொண்டு சிலுவை போட்டுக்கொண்டு இருக்கிறார். அதாவது பா.ஜ.க.வின் மதத்துவத்தை எதிர்த்து நிற்கிறாராம்.

நடிகர் விஜய் ஒரு பச்சைத்தமிழர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரது ‘பிகில்’ என்ன மொழியென்றும் தெரியவில்லை. இனியாவது தமிழகத்தை ஆள நினைப்பவர்கள், தமிழ் மீது கொஞ்சமாவது பற்று வைக்கட்டும்.