நோய் எதிர்ப்பு சக்தி தருமா ஆவின் மோர்..? அறிக்கை என்ன சொல்கிறது ?

இன்று ஆவின் நிறுவனத்தில் இருந்து நீண்டநாட்கள் கெட்டுப் போகாத பால் போன்ற ஒருசில புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


இதில் ஆவின் மோர் எதிர்ப்பு சக்தி தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதன் அறிக்கை படி, .தற்போதைய கொரோனாவைரஸ் தொற்று காலக்கட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, உப்பு போன்ற நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை சேர்த்து புதிய ஆவின் மோர் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த மூலிகை சக்தி நிறைந்த மோர், உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தியினைமேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமோர், அனைத்தும் தரப்புமக்களும்பயன்படுத்தும் வகையில் 200 மில்லிலிட்டர் பாட்டில் 15 ரூபாய்க்கு விற்கப்படும்.