ஆ.ராசா, கனிமொழியின் 2ஜி வழக்கு என்பதே ஒரு நாடகமா..? மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டனரா..?

1.90 லட்சம் கோடி ஊழல் என்று இந்தியாவையே அலறவைத்த 2ஜி ஊழலுக்குப் பின்னே ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் திட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் தகவல் இதுதான்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல கோடி ரூபாய்கள் ஊழல் நடந்ததாக கூறினார். இரண்டாமவர் இந்த விஷயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். மூன்றாவது ஒரு பெண், அவருடன் இணைந்துக் கொண்டார். பின்னர் நான்காவது ஒரு மனிதனும் அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஐந்தாவதாக ஒரு மனிதர் 2 ஜி ஊழலை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆறாவது மனிதன் ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். ஏழாவதாக ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்.

ஏழு வருடங்கள் கழித்து ...குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர். இது ஒரு ஊழலே அல்ல என்றது சட்டம்.

இப்போது முதல் மனிதன் (வினோத் ராய்) பி.சி.சி.ஐ. இன் முதலாளியாகிறார். மேலும் பத்ம பூஷன் விருதும் பெறுகிறார். இரண்டாவது மனிதர் அன்னா ஹசாரே, மௌனமாக இருந்து, Z + பாதுகாப்பு பெறுகிறார். மூன்றாவது பெண் (கிரன் பேடி) ஒரு கவர்னர். நான்காவது மனிதர் (அரவிந்த் கெஜ்ரிவால்) தில்லி முதல்வர்.

ஐந்தாவது மனிதன் (ராம்தேவ்) ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆனார். மேலும் கோடிகளில் நனைகிறார். ஆறாவது மனிதன் (சுப்ரமணியம் சுவாமி) எம்.பி. ஆகி கட்சியின் பொறுப்புக்கு வருகிறார். ஏழாவது மனிதர் இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆனார். நாம் அனைவரும் முட்டாளாக ஆனோம்.

இதுதான் உண்மையா…? பா.ஜ.க.தான் விளக்க வேண்டும்.