ரஜினிகாந்தை மிரட்டுகிறதா பா.ஜ.க.? நடிக்கிறாங்களான்னு தெரியலையேப்பா...

உளவுத்துறையின் தோல்விதான் டெல்லி வன்முறை என்று ரஜினிகாந்த் பேசிய விவகாரத்திற்கு பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஆர்.சேகர் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது உண்மையா, நடிப்பா என்று தெரியாமல் பலரும் தவிக்கிறார்கள்.


ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது எதிர்பாராத வகையில் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தார். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் என்றும் மத்திய அரசின் கவனக்குறைவால்தான் இந்த கலவரம் பெரிதாகி உள்ளது என்றும், கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால் பதவி விலகலாம் என்றும் எச்சரிக்கை செய்தார். 

மத்திய அரசை இதுவரை நேரடியாக ரஜினி விமர்சனம் செய்யாத நிலையில் திடீரென அவர் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியருக்கு ஆதரவாக மாறிவிட்டாரா அல்லது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடிக்கிறாரா என்பதுதான் பலருக்கும் வந்திருக்கும் சந்தேகம். 

இந்நிலையில் ரஜினிக்கு பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் 'கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளார். மற்றவர்கள் போலவே ரஜினிகாந்தும் மலிவான அரசியல் செய்வது சரியா? இது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றும் கூறியிருக்கிறார்.

உனக்கென்ன சேகர், எதையாச்சும் சொல்லிட்டுப் போயிடுவ...