ஐதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் பைனலுக்கான டிக்கெட்டுகள் 120 நொடிகளில் விற்றுத் தீர்ந்துள்ளன.
IPL பைனல்! 120 நொடிகளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்! டென்சனில் ரசிகர்கள்!

ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வரும் 12ஆம் தேதி ஐபிஎல் பைனல் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. தொடங்கிய 2 நிமிடங்களில் அதாவது 120 நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
ஐதராபாத் மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. ஆயிரம் ரூபாய் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுகள் உள்ளன. அத்தனை டிக்கெட்டுகளும் 2 நிமிடங்களில் விற்றது எப்படி என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டிக்கெட் விற்பனைனை ஈவெண்ட்ஸ் நவ் என்ற தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது. அந்த நிறுவனம் கள்ளச் சந்தையில் விற்க பல்வேறு டிக்கெட்டுகளை பிளாக் செய்து வைத்துவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.