IPL 2019 முதல் போட்டி: கோஹ்லி vs தோணி!

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் மாதம் 23 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாகம் 2019-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி தொடங்கி நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான முதல் 2 வாரத்துக்கான (ஏப்ரல் 5-ஆம் தேதி வரை) கால அட்டவணை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற  தேர்தலை ஒட்டி மற்றும் அதன் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது முதல் இரண்டு வாரங்களுக்கு உண்டான போட்டி அட்டவணையை ஐபிஎல் வெளியிட்டுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் மற்றும் தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான RCB அணியும் வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள தொடக்கபோட்டியில் மோதவுள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடவுள்ளதால் இப்போதே ரசிகர்களின் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்சின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொள்ளவுள்ளது. தனது மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் , நான்காவது போட்டியில் மும்பை இந்தியன் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.

மார்ச் 23இல் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான கால அட்டவணை தற்போது ஏப்ரல் 5ம் தேதி வரை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.