அலற விட்ட ஐபேக் ரிப்போர்ட்... ஆடிப்போன ஸ்டாலின்!

இதுவரையிலும், தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்று கூறிவந்த ஐபேக் நிறுவனம், சட்டென நிலைமை சிக்கலாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுக்கவே, ஸ்டாலின் பதறிபோய் இருக்கிறார்.


திமுக மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு வாரிசு அரசியல் பற்றியது. எனவே பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது வேட்பாளர்கள் பட்டியலில் வாரிசுகளுக்கு ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லி இருந்ததாம்.

 ஆனால், அப்படி மறுத்தால் உதயநிதிக்கு சீட் கொடுக்க முடியாமல் போய்விடுமே என, ஐபேக் டீமீன் ஆலோசனையைக் கண்டுகொள்ளாமல், சுமார் 20 வாரிசுகளுக்கு திமுகவில் சீட் கொடுக்கப்பட்டது,. மேலும், திமுக சிட்டிங் உறுப்பினர்களில், 97 பேரில் 82 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஸ்டாலின் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்து, " ஐயய்யோ... இது நாங்கள் கொடுத்த பட்டியல் இல்லையே...! என ஷாக்கான ஐபேக், வேட்பாளர்களை மாற்ற வேண்டும் எனக் கூறியதாம்.  ஆனால், ஸ்டாலின் மறுக்கவே, "அப்புறம் உங்கள் இஷ்டம்... திமுக தோற்றால் நாளை எங்களை எதுவும் கேட்காதீர்கள். அக்ரிமென்டிலும் அதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்" என ஐபேக் ஒதுங்கி விட்டது.

இந்த நிலையில், வாங்கிய பணத்துக்காக கடைசி கட்ட சர்வேயில் இறங்கியதாம் ஐபேக். ஆ.ராசா பேசிய ஆபாச பேச்சுக்குப் பின்னர் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் இதுவரை முன்னணியில் இருந்து வந்த திமுக, இப்போ சறுக்கல் நிலையில் உள்ளதாக ரிப்போர்ட் அனுப்பி உள்ளது. . ரிப்போர்ட்டைப் பார்த்து ஆடிப்போன ஸ்டாலின், ஐபேக்தான் வேண்டும் என அடம்பிடித்துக் கூட்டி வந்த மருமகன் சபரீசனை போனில் பிடித்துக் காய்ச்சி எடுத்துவிட்டாராம்!

என்ன பேசி என்ன செய்ய..? ஸ்டாலின் தலையில் முதல்வர் ஆகவே முடியாது என எழுதியிருந்தால் யாரால் மாற்ற முடியும்.