பாஜக கூட்டணிக்கு அழைப்பு! மருமகனுடன் ஸ்டாலின் விடிய விடிய ஆலோசனை!

மத்தியில் புதிதாக அமையும் பாஜக தலைமையிலான அரசில் இணையுமாறு திமுகவிற்கு வந்துள்ள ரகசிய அழைப்பால் விடிய விடிய ஆலோசனை நடைபெற்று உள்ளது.


வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் வியூக பொறுப்பாளர்கள் என்று கூறப்படும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிமுக தரப்பை தொடர்ந்து அணுகிக் கொண்டே இருக்கின்றனர். பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தபோது அமல்படுத்தப்பட்ட குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தற்போதும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் திமுக தரத்திற்கு பாஜக தரப்பு கொடுத்த முதல் வாக்குறுதி என்று கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் எம்பிக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கேபினெட்டில் முக்கிய இலாகாக்களை கொடுக்கவும் தயார் என்று பாஜக தரப்பு திமுகவிற்கு ஆசையை தூண்டி உள்ளது. இப்படியான சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மருமகன் சபரீசன் உடன் விடிய விடிய ஆலோசனை நடத்தியுள்ளார். திமுகவில் டெல்லி விவகாரங்களை தற்போது சபரீசன் தான் கவனித்து வருகிறார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டபோது அதனை கிட்டத்தட்ட தீர்த்து வைத்தவர் சபரீசன் தான். இவற்றையெல்லாம் அறிந்து சபரீசன் மூலமாகத்தான் தற்போது டெல்லி திமுகவை மணிக்கு இருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் டெல்லியில் இருந்து கொடுக்கப்படும் வாக்குறுதிகள் அதன் சாதக பாதகங்கள் குறித்து விடிய விடிய தனது மாமா ஸ்டாலினுடன் மருமகன் சபரீசன் பேசியதாக கூறுகிறார்கள்.

நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆலோசனையின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் ஸ்டாலின் என்ற ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.