உதயநிதிக்கு அழைப்பு வந்தாச்சு! பஞ்சமின்னா என்னன்னு சொல்லி அனுப்புங்க தலைவரே!

எல்லாவற்றுக்கும் ஆரம்பம் அசுரன் திரைப்படம்தான். இடைத்தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் அசுரன் படம் பார்த்தது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக ட்வீட் போட, அதையடுத்து வன்னியர்கள் கொந்தளிக்க, கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் திசை மாறி, முரசொலி இடத்தை திருப்பிக்கொடு என்பதில் வந்து நின்றது.


முரசொலி இடத்துக்கு பக்கா டாக்குமென்ட் இருக்கிறது ராமதாஸும், அன்புமணியும் அரசியலில் இருந்து வெளியே போவதற்கு தயார் என்றால் அதைக் காட்டுகிறேன் என்று சவால் விட்டார் ஸ்டாலின். 

அதையடுத்து பஞ்சமி நிலத்தின் டாக்குமென்ட் காட்டவேண்டும் என்று எத்தனையோ பேர் கேட்டும், தி.மு.க.வில் இருந்து யாரும் பேசவில்லை. கப்சிப் என்று அமைதியாக இருந்தார்கள். இந்த நேரத்தில்தான் அடுத்த அம்பு நேரடியாக உதயநிதி மீது பாய்ந்திருக்கிறது.

ஆம், இப்போது அவர்தான் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். அதனால் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அமைவிடம் - பஞ்சமி நிலச்சர்ச்சை தொடர்பாக, தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முரசொலி இடத்துக்கான தக்க ஆவணங்களுடன் நவம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராக முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஆஜராகவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

ஜாலியா நடிகைகள் பின்னே சுத்திக்கிட்டு இருந்த வாரிசை இப்படி அலையவிடுறீங்களே தலைவரே... அவருக்கு பஞ்சமின்னு என்னன்னு சொல்லிக்கொடுத்து அனுப்புங்க. இல்லைனா ஏதோ நடிகைன்னு நினைச்சுட்டு சந்தோஷமா போய் நின்னுடுவார்.