விஜயகாந்த், சத்யராஜ் பிள்ளைகள் சினிமாவில் தோற்றுப் போனதுக்கும், சிவகுமார் பிள்ளைகள் ஜெயித்ததற்கும் பின்னே உள்ள மர்மம் தெரியுமா?

சினிமாவில் வாரிசுகளை கலங்கடிக்கும் மர்மம் ஒன்று இருக்கிறது தெரியுமா.


இந்திய சினிமாவில் வாரிசுகள் களமிறக்கப்படுவது புதிதல்ல.அதிலும் தமிழ் சினிமாவில் அது 50 வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.ஆனால் அதில் வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர் என்று யோசித்துப்பாருங்கள்.அதன் பின்னால் ஒரு மர்மம் இருப்பது புரியும்.

நடிகமன்னன் என்று கொண்டாடப்பட்ட பி.யு சின்னப்பா தமிழின் முதல் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்.அவரது மகன் ராஜா பகதூர் கதாநாயகனாக களமிறமிறங்கி இரண்டே படங்களுடன் கானாமல் போனார்.நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சிவாஜிகனேசனின் மகன்களில் ராம்குமார் சுத்தமாக எடுபடவில்லை,பிரபு ஒரு சராசரி நடிகராக ஒன்றிரண்டு வெற்றிகளை மட்டுமே சுவைத்தார்.

எம்.ஜி ஆரின் அண்ணன் மகனும் சினிமாவில் மோதிபார்த்து கானாமல் போனவர்களில் ஒருவர். முத்துராமனும் சிவகுமாரும் சராசரி நடிகர்கள்.ஆனால் முத்துராமன் மகன் கார்த்திக் 80 களின் தமிழ்சினிமாவில் உச்ச நடிகராய் இருந்தார்.சிவகுமாரின் மகன்கள் சூர்யாவும்,கார்த்தியும் அவர்களின் தந்தை கனவிலும் நினைத்திராத இடத்திற்கு உயர்ந்து விட்டனர். இதிலிருந்து என்ன தெரிகிறது?

அப்பாக்கள் சூப்பர்ஸ்டார்களாய் இருந்தால் வாரிசுகள் வாஷவுட் ஆகிவிடுகிறார்கள்.அப்பாக்கள் ஆவரேஜாக இருந்தால் பிள்ளைகள் பிரகாசிக்கிறார்கள்.விஜயகாந்த் மகன்,சத்தியராஜ் மகன் என்று அப்படியே மண்டைக்குள் ஓட்டிப்பாருங்கள் புரியும்.

இது நடிகர்களுக்கு மட்டுமல்ல இயக்குநர்களுக்கும் பொருந்தும்.பாரதிராஜாவை எடுத்துக்கொள்ளுங்கள் . இயக்குநர் இமயம் என்று இந்தியாவே வியந்து பார்த்த மனிதர்.அவரது மகன் மனோஜ் எவ்வளவு முயன்றும் எடுபடவே இல்லை.பாக்கியராஜ் கதாசிரியர்,இயக்குநர், நடிகர் என்று மூன்று துறைகளில் வெற்றி பெற்றவர்,நடிகையாக முயன்ற மகளைக் கானோம்,மகனோ இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்.

ஆனால்,கஸ்தூரி ராஜா என்ற வெகு சாதாரண இயக்குநரின் பிள்ளைகளைப் பாருங்கள். இயக்குநராக செல்வராகவன் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார்.கஸ்த்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ்,கமலஹாசனும் ரஜினியும் தங்கள் இளமைக் காலத்தில் எட்ட முடியாத இடங்களை சாதாரணமாக எட்டிவிட்டார்.இயக்குநர், பாடலாசிரியர் என்று தொட்டதெல்லாம் வெற்றி.

இதில் விதிவிலக்கு என்று டி.ராஜேந்தரை சொல்லலாம் என்றால் அவரும் ஒரு வகையில் இந்த கேட்டகிரிக்குள் வந்து விடுகிறாத்.அவர் இயக்குநராகவும்,இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றிருந்தாலும்,அவரது நடிப்பு காமெடிதான்.அதனால்த்தான் சிம்பு நடிகராக ஜெயித்திருக்கிறார்.இது நடிகைகளுக்கும் பொருந்தும்.ஒரு சாதாரண நடிகையான சந்தியாவின் மகள்தான் ஜெயலலியா.மாபெரும் நடிகையான சவுகார் ஜானகியின் பேத்திதான் வைஷ்ணவி!

இந்த விடை தெரியாத மர்மம் சுட்டிக்காட்டுவது என்ன?

நீங்கள் மக்கு இயக்குநரா, ஆவரேஜ் நடிகரா உங்கள் வாரிசுகளை தைரியமாக களமிறக்குங்கள்,அவர்கள் வெற்றி பெருவார்கள்.நீங்கள் நாடு போற்றும் நடிகரா,இயக்குநரா உங்கள் பிள்ளைகளை வேறு துறைக்கு திருப்பி விடுவதுதான் புத்திசாலித்தனம்.