தேமுதிகவை அசிங்கப்படுத்தினார்! தற்போது அவமானப்பட்டு நிற்கிறார்! துரைமுருகனை விளாசிய பிரேமலதா!

கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவை அவமானப்படுத்திய துரைமுருகன் தற்போது அவமானப்பட்டு நிற்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இரண்டு வாரங்களுக்கு முன்னர் தேமுதிக கூட்டணி விவகாரத்தில் துரைமுருகன் மிகவும் அசிங்கப்படுத்தினார். தேமுதிக நிர்வாகிகளை வீட்டிற்கு வரவழைத்து அது குறித்து செய்தியாளர்களுக்கு தெரிவித்து எங்கள் கட்சியை சந்திக்க முயற்சி செய்தார் துரைமுருகன்.

ஆனால் இப்போது என்ன ஆகியிருக்கிறது என்று பாருங்கள். துரைமுருகன் வீட்டிலிருந்து கட்டு கட்டாக பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் தோன்றித் தோன்றி துரைமுருகன் வீட்டில் இருந்து பணம் எடுப்பார்கள்.

துரைமுருகன் வீட்டில் 500 கோடி இருக்கிறது என்கிறார்கள் ஆயிரம் கோடி இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய துரைமுருகன் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கிறார். இதைத்தான் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்.

தேமுதிகவையும் சரி கேப்டனையும் சரி சீண்டி அவர்கள் நிச்சயமாக தண்டனையை அனுபவித்தே ஆவார்கள். அதற்கு துரைமுருகனை சாட்சி. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.