ஒரு நாள் இரவு என்னுடன் இருந்தால் ஒரு லட்சம்! டாக்டரின் அழைப்பை நிராகரித்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்!

இளம் பெண் ஒருவர் பாலியல் சீண்டல் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த இந்திய மருத்துவர் அவரை கொலை செய்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு சிக்கியுள்ளது.


நியூசிலாந்தில் பணிபுரிந்து வந்த வினோத் ஸ்காந்தா என்ற இந்திய மருத்துவருக்கு 16 வயது கொண்ட அம்பர் ரோஸ் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணின் மீது ஏற்பட்ட மோகத்தால், "ஒரு லட்சம் பணம் தருகிறேன். என்னுடன் படுக்கை அறைக்கு வருவாயா?" என வினோத் கேட்டிருக்கிறார்.  

இதற்கு மறுத்த அம்பர் ரோஸ் அவரிடம் சில நாட்கள் பேசுவதை நிறுத்திவிட்டார். இருப்பினும் தொடர்ந்து வினோத் வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அம்பர் ரோஸ் மற்றும் வினோத் இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது, அம்பர் ரோஸ் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கிறார். அச்சமயத்தை வினோத் பயன்படுத்திக்கொண்டு அவரை பாலியல் ரீதியாக சீண்டியிருக்கிறார்.  

இச்சம்பவத்தால் மனமுடைந்த அம்பர் ரோஸ் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் அவரை வீட்டில் தனியாக இருக்கையில் கழுத்து மற்றும் உடல் பகுதிகளை அறுத்து கொலை செய்துள்ளார். 

இச்சம்பவம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்திய மருத்துவர் மற்றும் அவரது நட்பு வட்டாரங்களை விசாரித்து வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.  

இது தொடர்பான இறுதி தீர்ப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.  வினோத் போதை, காமத்திற்கு அடிமையானதால், வேலை நேரத்திலேயே மது அருந்திவிட்டு மருத்துவமனைக்கு வந்ததனால் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.