இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு மெகா ஜாக்பாட்...

இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து அந்நிறுவனத்திற்கு தெரிவித்த சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கு அந்நிறுவனம் 30,000 டாலர் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.


பெரும்பாலும் சமூக வலைத்தளத்தில் மிகவும் முக்கியமான செயலியாக இருப்பது இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் இவைகள் தான். இளைஞர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் இந்த செயலிகளை பயன்படுத்தி தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலவற்றை இதில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொழில்நுட்பம் சார்ந்த பகுதிகள் மற்றும் அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை செய்து வருகிறார். சென்னையைச்சேர்ந்த சேர்ந்த லட்சுமன் முத்தையா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து அதை அந்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு பயனாளர் தனது கடவுச்சொல் மாற்றும் வசதியை வைத்து அதனை ஹேக் செய்ய முடியும் என நிரூபித்துள்ளார். பயனாளர் ஒருவர் தனது கடவுச்சொல்லை மாற்ற அதற்காக கொடுக்கப்படும் ரெக்கவரி கடவுச்சொல் மூலம் அந்த அக்கவுண்ட்டைப் ஹேக் செய்ய முடியும் என கண்டுபிடித்து அதையும் நிரூபித்துள்ளார். இதை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களில் கொடுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அவர்களின் பாதுகாப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டு அதை திருத்தி அமைத்து இந்த குறைபாட்டினை சரி செய்துள்ளனர்.

இந்நிலையில் இதனை கண்டுபிடித்த லக்ஷ்மன் முத்தையாவுக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவரை பாராட்டும் வகையில் அவருக்கு 30 ஆயிரம் டாலர் சன்மானம் வழங்கியுள்ளது.