போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார்.
பிரிட்டன் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் மருமகன்! எப்படி தெரியுமா?

பதவியேற்ற பின் போரிஸ் ஜான்சன் இரண்டாம் எலிசபெத் ராணியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பிரதமராக பதவி ஏற்ற போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேரை தனது கேபினட்டில் அமைச்சர்களாக சேர்த்து அசத்தியுள்ளார். இதில் பிரீத்தி பட்டேல் என்ற இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு உள்துறை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது உலக வாழ் இந்தியர்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது . ஏனெனில் பிரிட்டனில் 3 இந்திய கேபினட் அமைச்சர்கள் முதல் முறையாக பதவி ஏற்றது இந்திய வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும். இதில் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனும் ஒருவராவார்.
இதில் இந்திய கேபினட் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு தேசிய பாதுகாப்பு குற்றங்களை சமாளித்தல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கையாளுதல் போன்ற முக்கியமான பொறுப்புகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
ஆனால் அண்மையில் மனைவியை பிரிந்து காதலியுடன் போரிஸ் ஜான்சன் வாழ்ந்து வருகிறார். இருந்தாலும் இவரை இந்தியாவின் மருமகன் என்று தான் அழைக்கிறார்கள்.