பெட்ரோல் பாதி! தண்ணீர் மீதி! பாதியிலேயே நின்ற வாகனங்கள்! விபரீத பெட்ரோல் பங்க்! எங்கு தெரியுமா?

கன்னியாகுமரியில் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ள பங்க் ஒன்றில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. தண்ணீர் கலந்து பெட்ரோலை பயன்படுத்த வாகனங்கள் சிறுது நேரத்தில் பழுதாகிய நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் பகுதியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்க் அருகில் நேசமணி கிறித்தவ கல்லுரி இயங்கி வருகின்றது. கல்லூரி அருகில் அமைந்துள்ளதால் அதிகமான பொது மக்கள் இப்பங்கில் பெட்ரோல் போடுவது வருவது வழக்கம். 

இந்த நிலையில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் காலையில் பொது மக்கள் அனைவரும் வழக்கம்போல் பெட்ரோல் நிரப்பி சென்றனர். பின்னர் சிறிது தூரம் கழித்து பெட்ரோல் நிரப்பி சென்ற 50க்கு மேற்பட்ட வாகங்கள் பழுதுயாகி பாதி வழியில் நின்றுள்ளது. 

இதனையடுத்து, வாகன ஓட்டிகள் அனைவரும் இந்தியன் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை அடுத்து, இந்தியன் பெட்ரோல் நிரப்பி சென்ற வாகனங்களில் இருந்து பெட்ரோலை எடுத்து சோதனை செய்யப்பட்டது, பிறகு தான் தெரியவந்துள்ளது தண்ணீர் கலந்து பெட்ரோல் என்று. இதனை அறிந்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

பெட்ரோலில், வெண்மை நிறத்தில் திரவம் கலந்திது இருப்பதைப் பற்றி பங்க்கின் உரிமையாளர் பிரின்ஸ் அவர்களிடம் மக்கள் கேட்டபோது, பெட்ரோலில் 10 விழுக்காடு அளவுக்கு எத்தனால் கலக்கப்படுவது வழக்கம், ஆனால் தற்போது, அந்த எத்தனாலுடன் தவறுதலாக தண்ணீர் கலந்தால் வெண்மை நிறத்தில் திரவம் படந்து இருகின்றது. மேலும், பாதிப்புக்குள்ளான வாகனங்களை பழுது நீக்குவதற்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்வதாக பங்ககின் உரிமையாளர் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு திரண்டு இருந்த பொது மக்கள் அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.