கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையா நிர்மலா சீதாராமன்? பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய தேசிய லீக்

கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாக மத்திய அரசு மாறியுள்ளதை மற்றும் முறை இந்த பட்ஜெட் நிரூபித்துள்ளது என்று இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப் அறிவித்துள்ளார்.


மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ள எல்ஐசியின் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியிலப்படும் என அறிவித்திருப்பது, எல்ஐசியின் பணம் செலுத்தியிருக்கும் பல லட்சகணக்கான வாடிக்கையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்ற மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கி பங்குகளை விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது சாமனிய மக்களையும் கவலை அடைய செய்துள்ளது.

தனிநபர் வருமான வரி உச்சரவரம்பில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளதாக பட்ஜெட் அறிவித்துள்ளது, யானை பசிக்கு சோளப்பொறி அளித்துள்ளது போல அமைந்துள்ளது. நாட்டில் தற்போது கல்வி வியாபார பொருளாக மாறியுள்ள நிலையில், கல்வித்துறையில் வெளிநாடுகள் முதலீடுக்கு இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது, கல்வியாளர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருக்குறளில் குறிப்பிட்டுள்ள நோய் நீக்கம், செல்வம், விவசாயம், மகிழ்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட 5 காரணிகளை பிரதமர் மோடி வெற்றி கண்டுள்ளதாக குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேடிக்கையின் உச்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே என பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ள நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட் உரையில் சரஸ்வதி சிந்துவெளி நாகரீகம் என குறிப்பிட்டு பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுத்தர, ஏழை, எளிய , சாமனிய மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாத ஏமாற்றியுள்ள பட்ஜெட்டாக தான் பார்க்க முடிகிறது. மத்திய அரசின் இன்றைய பட்ஜெட்டின் தாக்கம் பங்கு சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி ஏற்படுத்தியிருப்பதே இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.