பெத்தவங்க முன்னாடி மகள் மிஷா மாலிக் செய்த கேவலமான செயல்! வைரல் வீடியோ!

பெற்றோர் முன்னிலையில், இளம்பெண் ஒருவர் மொடா குடி குடிக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகப் பரவி வருகிறது.


ஆல்கஹால் குடிப்பது இன்றைய சூழலில், பெரும் உளவியல் சிக்கலாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும், சிறுவர், சிறுமியர் தொடங்கி வயதானவர்கள் வரை பலரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீர்கெடுவது வழக்கமாக உள்ளது. 

அதேசமயம், இந்தியர்கள், குடிப்பழக்கத்திற்கு இன்றளவும் விரோதியாகவே இருந்து வருகின்றனர். பல இந்திய பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பகீரத பிரயத்தனங்கள் மேற்கொள்வதும் வாடிக்கையாகஉள்ளது.

இந்நிலையில், ஓஹியோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில், இந்த வீடியோவை எடுத்த காரணத்தால்தான், எனது பெற்றோர் இந்தியாவுக்கு என்னை திருப்பி அனுப்புகிறார்கள், என்று கேப்ஷன் எழுதியுள்ளார்.

மிஷா மாலிக் என்ற அந்த இளம்பெண், தனது பெற்றோர் முன்னிலையில் அமர்ந்து, ஆல்கஹால் குடித்துக் கொண்டே இருக்க, அவரது பெற்றோர் நிறுத்தும்படி வலியுறுத்துகிறார்கள். ஆனால், இதுபற்றி அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.