துபாயில் முஸ்லீமாக மாற்றப்பட்ட இந்திய கிறிஸ்தவ பெண்! காரணம் இது தான்..! அந்த பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

டெல்லி யுனிவர்சிட்டியில் படித்து வந்த 21 வயது கேரள மாணவியை காணவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், அவர் விருப்பத்தின் பேரில் முஸ்லீம் மதத்திற்கு மாறியதாகக் கூறியுள்ளார்.


கேரளாவைச் சேர்ந்தவர் சியானி பென்னி. கிறிஸ்தவப் பெண்ணான இவர், டெல்லி யுனிவர்சிட்டியில் படித்து வந்தார். செப்டம்பர் 18ம் தேதி அபு தாபி சென்ற இவரை அதன்பின் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இவரை யாரோ ஒரு முஸ்லீம் தீவிரவாதி லவ் ஜிஹாத் என்ற பெயரில் மூளைச் சலவை செய்து, மதமாற்றம் செய்துவிட்டதாக, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் ஜார்ஜ் குரியன் குற்றம் சாட்டினார். இவ்விவகாரத்தில் என்ஐஏ தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக, அவர் உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியதால், இந்த விவகாரம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது.  

இந்நிலையில், சம்பந்தப்பட்ட டெல்லி மாணவி தற்போது பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையம், கேரள முதல்வர் உள்ளிட்டோருக்கு, இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுதவிர, ஊடகம் ஒன்றில் விரிவான பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ''விருப்பத்தின் பேரில் நான் முஸ்லீமாக மதம் மாறியுள்ளேன்.

யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. கடந்த 9 மாதங்களாக நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் எனக்கு பலவிதங்களில் உதவிகள் செய்துள்ளார். அவரது உதவியுடன் அபு தாபியில் வசிப்பதற்கான விசா பெற்றேன். தற்போது அபு தாபியில் வசித்து வருகிறேன். காதலுக்காக, மதம் மாறி, எனது காதலனுடன் வசித்து வரும் என்னை யாரும் மிரட்டவில்லை.

கடத்தவும் இல்லை. ஒரு இந்திய குடியுரிமை பெற்ற நபர் என்ற முறையில்  விரும்பும் மதத்திற்கு மாற எனக்கு சுதந்திரம் உள்ளது. இதுபற்றி எனது பெற்றோரிடம் ஏற்கனவே நான் தெளிவுபடுத்திவிட்டேன். இதனை இந்திய ஊடகங்கள், போலீசார், கேரள அரசு புரிந்துகொண்டு என் விருப்பப்படி வாழ அனுமதிக்க கோருகிறேன். நான் எந்த தீவிரவாத இயக்கத்திலும் சேரவில்லை. என்னை பற்றி வதந்திகள் பரப்புவதை நிறுத்தும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்,'' எனக் குறிப்பிட்டுள்ளார் .