நான் ஓரினச்சேர்க்கையாளர்! தங்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை பகீர் அறிவிப்பு!

ஒரிஸ்ஸாவை சேர்ந்த தடகள வீராங்கனை துத்தி சந்த் தான் ஒரு ஓரினசேர்கையாளர் என்று சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாக கூறியுள்ளார்.


இந்தியாவில் உள்ள தடகள வீராங்கனைகளில்  இவரே முதல்முறையாக தான் ஒரு ஓரினசேர்கையாளர் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் இவர் தனது சொந்த மாநிலமான ஒரிஸாவில் உள்ள கோபால்பூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் துத்தி,  அந்த பெண்ணை பற்றிய விவரம் எதுவும் கூறவில்லை. 

மேலும் இதை பற்றி பேசிய துத்தி, "எனக்கான ஒரு துணையை  நான் தேர்வு செய்து கொண்டேன்.  அதுமட்டுமில்லாமல் அதற்கான முழு சுதந்திரமும் எனக்கு உள்ளது. மேலும் நான் எப்பொழுதும் ஓரின  சேர்க்கையாளர்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பேன். இது ஒவொருவரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். இதற்கான சட்டமும் உச்ச்சநீதிமன்றம் இயற்றியுள்ளது. 

தற்போது என்னுடைய முழு கவனமும் ஒலிம்பிக் போட்டியின் மீது தான் உள்ளது.  இதற்கு பின்பு நான் அந்த பெண்ணுடன் என் வாழ்க்கையை வாழ போகிறேன்"  என்று கூறினார்.