கிளவுஸில் இந்திய ராணுவ சின்னம்! தோனிக்கு கிடைத்தது எப்படி தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது கைகளில் அணிந்துள்ள ராணுவ சின்னம் விளையாட்டுப் பொருள் அல்ல.


கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியை கௌரவிக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் துணை அமைப்பான இந்திய ராணுவத்தின் லெஃப்டினன்ட் கலோனலாக தோனி நியமிக்கப்பட்டார். 

கிரிக்கெட் மூலமாக இந்திய புகழை சர்வதேச அளவில் நிலைநாட்டி அதன் விளைவாக தோனியை பாராட்டும் விதமாகவும் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் அப்போதைய இந்திய ராணுவத் தளபதி விக்ரம் சிங் தோனிக்கு துணை ராணுவப்படையில் இந்த லெப்டினட் கலோனல் பதவியை கொடுத்து இருந்தார். இந்தப் பதவி வெறும் அடையாளத்திற்காக மட்டும் என்று அல்லாமல் 2015ஆம் ஆண்டு தோனி சிறப்பு பயிற்சிகளை ஈடுபட்டார்.

பிராந்திய ராணுவத்தின் பாராசூட் படைப் பிரிவில் சுமார் 15 நாட்கள் அவர் தீவிர பயிற்சி செய்தார். இதன் விளைவாக போர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலமாக தோனி குறித்து ராணுவ வீரர்களைப் போல் தன்னையும் மெருகேற்றினார். இதனைத் தொடர்ந்து அவரது வீரத்தைப் பாராட்டி தற்போது அவர் தனது கிளவுசில் அணிந்துள்ள ராணுவ சின்னம் வழங்கப்பட்டது.

இந்திய பிராந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்றதன் அடையாளமாக பெற்ற அந்த சின்னத்தை தான் தற்போது தனது கிளவுசில் அணிந்து தோனி விளையாடி வருகிறார். எனவே அது அவர் விளையாட்டுத்தனமாக பெற்றதல்ல கடுமையாக உழைத்துப் பெற்ற ஒன்று என்பதை icc புரிந்து கொள்ள வேண்டும்.