மீண்டும் வாலாட்டினால்..! மூக்கை உடைத்துவிடுவோம்! பாகிஸ்தானை தெறிக்கவிட்ட ராணுவ தளபதி!

கார்கில் பாணியில் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்தால் பாகிஸ்தான் மூக்கு உடைபட்டு ரத்தம் ஒழுக செல்ல நேரிடும் என இராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.


1999 ஆம் ஆண்டு கார்கில் உள்ளிட்ட இடங்களை பாகிஸ்தான் வளைத்துப் பிடித்தது. தொடக்கத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது போல் இருந்தாலும், பின்னர் அதிரடித்தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், பாகிஸ்தானை ஓட ஓட விரட்டி கார்கிலில் வெற்றிக் கொடி நாட்டினர்.

கடந்த 20 ஆண்டுகளாக ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று கார்கில் அருகே உள்ள தராஸில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ தளபதி பிபின் ராவத் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய மண்ணில் பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு வித்திடுவதையும் அத்துமீறலையும் தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டினார். கார்கில் போரின் போது அவ்வளவு பெரிய பதிலடியை எதிர்கொண்ட பாகிஸ்தானுக்கு மீண்டும் அதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபட துணிவிருக்காது என்ற அவர், எனினும் தப்பித் தவறி மீண்டும் அதுபோன்ற ஒரு அத்துமீறல் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டால் அது மூக்கு உடைந்து ரத்தம் ஒழுக செல்ல நேரிடும் என எச்சரித்தார்.